இராஜபாளையம், மார்ச் 23- மாவீரன் பகத்சிங் நினைவு தினத்தை முன் னிட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவ மனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பகத்சிங் தலை மை தாங்கினார். ரத்த தான முகாமை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் மருத்து வர் அறம் துவக்கி வைத்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி, இந் திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் லிங் கம், அரசு மருத்துவமனை யின் தலைமை மருத்துவர் மாரியப்பன் ரத்த வங்கியின் மருத்துவர் கிரிஜா மற்றும் ரவி விஜயன் ராமசுப்பு உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.