districts

img

சிறப்பாக பணியாற்றிய தஞ்சை காவல்துறையினர் 8 பேருக்கு ஒன்றிய அரசு பதக்கம் வழங்கல்

தஞ்சாவூர், பிப்.22–  தஞ்சாவூரில் சனிக்கிழமை காவல்துறையில் சிறப்பாக பணி யாற்றிய எட்டு பேருக்கு, ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட “அதி உத்கிரிஷ்டா சேவா பதக்” என்ற பதக்கங்களை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.ராஜாராம் வழங்கினார்.   ஒன்றிய அரசு “அதி உத்கிரிஷ்டா  சேவா பதக்” என்ற பதக்கங்களை, காவல் துறையில் சிறப்பாக பணி யாற்றியவர்களுக்கு வழங்கி வருகிறது.  அதன்படி, கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி, தஞ்சாவூர் ஆயு தப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடந்தது. இதில், உளவுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய பட்டுக் கோட்டை அருகே குறிச்சி பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் துரைமாணிக்கம், தஞ்சை யைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் மோகன், தஞ்சாவூர் மேற்கு  காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பத்மநாபன் ஆகிய மூவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும், தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் சரஸ்வதி, சரவணன், தெற்கு காவல்  நிலையத்தில் பணியாற்றும் ஆல்பர்ட் டென்னிஸ், ஒருங்கிணைந்த குற்றப்புல னாய்வு பிரிவு சென்னையில் பணி யாற்றும் முத்துகிருஷ்ணன், கும்பகோணம் தாலுகா காவல் நிலை யத்தில் பணியாற்றும் சுரேஷ் ஆகிய 5 பேருக்கு வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, பதக்கங்களை பெற்ற வர்களுக்கு அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டது. இந்த பதக்கங்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.ராஜாராம் வழங்கினார்.