திருச்சிராப்பள்ளி, ஜன.8- 2021 ஆம் ஆண்டு நீட் தேர்வில் கேர் அகாடமியில் தமிழ்வழியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற்றுள்ள னர். இதுகுறித்து திருச்சி கேர் அகடாமி இயக்குனர் பேரா.முத்தமிழ்ச்செல்வன் கூறு கையில், 2021 ஆம் ஆண்டு நீட் தேர்வில் கேர் அகாடமியில் தமிழ்வழியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற்றுள்ள னர். மாணவர் சிவா 514 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் இரண்டாம் இடமும், புதுக் கோட்டை மாவட்டத்தில் முதலிடமும் பெற்றுள்ளார். கார்த்திக் ராஜா இரண்டாவது இடம், தீபிகா 3-வது இடம், வாலண் டீனா 4-வது இடம் பிடித்துள்ளனர். மாணவி அபிராமி தஞ்சை மாவட்டத்திலும், ஆர்த்தி கரூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ள னர். மணிமேகலை திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டு கேர் பயிற்சி மையத்தை சேர்ந்த 30 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அரசுப் பள்ளி தமிழ்வழி மாணவர்க ளுக்கு, இட ஒதுக்கீடு வழங்கும் முன்பே பொது ஒதுக்கீட்டில் தமிழ்வழி மாணவர்க ளுக்கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 2018 ஆம் ஆண்டு நீட் தேர்விற்கு இங்கு பயிற்சி பெற்ற மாணவர் விஷ்ணு கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியி லும், கபிலன் தஞ்சை மருத்துவக் கல்லூரியி லும், ஜெயஸ்ரீ பெருந்துறை மருத்துவக் கல்லூ ரியிலும் பயின்று வருகின்றனர். 2019 ஆம் ஆண்டு பயிற்சிபெற்ற தமிழ்வழி மாணவர் கவியரசன் கோவையிலும், கமல்ராஜ் காஞ்சிபுரத்திலும் மருத்துவம் பயின்று வரு கின்றனர். 2020 ஆம் ஆண்டு மாணவர் பெரிய முத்து, கோவை தரணிகா, தஞ்சாவூர் யோ கேஸ்வரி, தூத்துக்குடி சபிதா, திருவாரூர் மாணவிகள் ஜீவிகா, ஸ்ருதி, சிவகங்கை பிளெஸ்சிம் ஆகியோர் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வருகின்ற னர். அரசு பள்ளி மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்தால், பொதுப் போட்டியில் மருத்துவராகி பெருமை சேர்க்க முடியும் என்பதை கேர் பயிற்சி மையம் நிரூபித்துள்ளது என்றார்.