புதுக்கோட்டை, ஜூலை 19- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் உள்ளூர் தொலைக்காட்சி வழியாக வீடுகளிலேயே மாணவர்கள் கல்வி கற்க ஏற்பாடு செ ய்யப்பட்டுள்ளது பெற்றோ ர்கள் மத்தியில் பெரும் வர வேற்பைப் பெற்றுள்ளது. ஊரடங்கால் பள்ளிகள் திறக்க முடியாத சூழலில் தனியார் பள்ளி மாணவர்க ளுக்கு ஆன்-லைன் மூலமாக கல்வி கற்பிக்கப்படுகிறது. இதனால், அரசுப் பள்ளி மாணவர்கள் மிகவும் பாதி க்கப்பட்டு வருகின்றனர். இது மாணவர்களுக்கும் பெ ற்றோருக்கும் கடுமையான மன உளைச்சலை ஏற்ப டுத்தி வருகிறது. இத்தகைய சூழலில் அரசுப் பள்ளி மாண வர்களின் நலனைக் கரு த்தில் கொண்டு புதுக்கோ ட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை வட்டார கல்வி அலு வலகம் மூலமாக வீட்டிலி ருந்தே கற்பதற்கான ஏற்பா ட்டை செய்துள்ளது. சிறந்த அரசுப் பள்ளி ஆசிரி யர்களைக் கொண்டு வீடியோ வழியில் கற்பித்தலைப் பதிவுசெய்து தினமும் ஒரு பாடம் வீதம் ஆண்ட்ராய்டு அலைபேசிகளுக்கு அனுப்பி கற்றல், கற்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டு வந்தது.
அப்பொழுதான் பெரும்பாலான ஏழை, எளிய மாணவர்களுக்கு ஆண்ட்ரா ய்டு மொபைல் வசதி இல்லாதது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து கிராமப்புற மா ணவர்களுக்கும் பாகுபா டின்றி பயன்பெறும் வகை யில் உள்ளூர் தொலை க்காட்சி வழியில் பாடங்களை ஒளிபரப்ப முடிவு செய்ய ப்பட்டது. இந்த முயற்சிக்கு உள்ளூர் தொலைக்காட்சி ஒளிப்பரப்பாளர்கள் இசைவு தெரிவித்ததால் காமராசர் பிறந்த தினமான ஜூலை 15 முதல் உள்ளூர் தொலை க்காட்சி வழியாக வீட்டு க்கற்றல் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் கே.எஸ்.இராஜேந்திரன் தலைமை வகித்தார். தொழிற்நுட்ப ஆலோசகர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயி ற்றுநர்கள், சிறப்பாசி ரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.