மயிலாடுதுறை, டிச.10 - மாண்டஸ் புயலால், மயிலாடு துறை மாவட்டம் தரங்கம்பாடியில் அமைக்கப்பட்டு வரும் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள தூண்டில் வளைவு சேதமடைந்துள்ளது. தரங்கம்பாடியில் மீனவர்க ளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக அர சால் 120 கோடி ரூபாய் நிதியில் மீன்பிடித் துறைமுக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. மீனவர்கள் படகுகளை பாதுகாப் பாக நிறுத்தி வைப்பதற்காக கடலில் 1070 மீட்டர் தூரம் 15 அடி உயரம், 15 அடி அக லத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு 90 சதவீத பணிகள் நிறைவடைந்தன. இந்நிலையில் கடந்த 2020-ல் “ஆம்பன்” புயலின்போது தூண்டில் வளைவுக்காக கொட்டப்பட்டிருந்த கருங்கல் தடுப்புச் சுவரின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதுகுறித்து மீன வர்களின் கோரிக்கையையடுத்து கூடுதலாக ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ரூ.190 கோடி மதிப்பீட்டில் 20 அடி உயரமாக தூண்டில் வளைவுடன் துறைமுக பணிகள் நடை பெற்று வந்தன. தற்போது பணிகள் இறுதி நிலையை எட்டி யுள்ள நிலையில், சனிக்கிழமை அதிகாலை கரையைக் கடந்த மாண்டஸ் புயல் மற்றும் கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு மீண்டும் சேதமடைந்துள்ளது. கருங் கற்களால் ஆன 20 அடி உயரம் உள்ள தடுப்புச் சுவர் மீது கான்கிரீட்டிலான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக 10 அடியில் இருந்து 15 அடி உயரம் வரை கடல் அலை கள் எழும்பி தூண்டில் வளைவு தடுப்புச் சுவர் மீது மோதியதால் தூண்டில் வளைவின் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கருங்கற்களாலான தடுப்புச் சுவரில் மண் கொண்டு நிரப்பப்பட்டு மேலே கான்கிரீட் போடப்பட்டுள்ளதால் அலையின் வேகத் தால் கருங்கல்லில் சரிவு ஏற்பட்டு, சமதளத் தில் இருந்த கான்கிரீட் பாதையின் சில இடங்க ளில் லேசாக உள்வாங்கியுள்ளது. மேல்மட்ட விளிம்பு பகுதிகள் சேதமடைந்துள்ளது. தமிழக அரசு தூண்டில் வளைவை ஆய்வு செய்து சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும் என தரங்கம்பாடி பகுதி மீன வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.