மயிலாடுதுறை, மார்ச் 19 - மயிலாடுதுறை மாவட் டம் பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்த ரன் கல்லூரியின் விலங்கி யல் துறை சார்பில் புதிய பூங்கா திறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. கல்லூரியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு (1972-2022) சுமார் 1.5 ஏக்கர் பரப்பள வில், விலங்கியல் துறையின் முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் பேராசிரி யர்களின் உதவியோடு கல்லூரி வளாகத்தில், மாண வர்களின் பயன்பாட்டிற்கென தொழில் கல்வி சார்ந்த, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மண்புழு உரம், இயற்கை உரம், மழை நீர் சேமிப்பு தொட்டி, மூலிகை தோட்டம் மற்றும் காய்கறி தோட்டம் போன்றவற்றை அமைத்துள்ளனர். புதிய பூங்காவினை கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் திறந்து வைத்து உரையாற்றினார். முன்ன தாக பூங்காவின் சிறப்பம் சங்கள் குறித்து விலங்கியல் துறை தலைவர் கிறிஸ்டி பொன்னி உரையாற்றினார். கல்லூரியின் காசாளர் பொறியாளர் தியாகராஜன் மற்றும் பொறையார் சபை குரு.ஜான்சன் மான்சிங் மற்றும் துணை முதல்வர்கள் ஜான்சன் ஜெயக்குமார், ஜோயல் எட்வின்ராஜ், அனைத்து துறை பேராசிரி யர்கள், அலுவலக ஊழி யர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் திர ளாக கலந்து கொண்டனர்.