திருச்சிராப்பள்ளி, ஜூலை 10- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க திருச்சி மாவட்ட 5 ஆவது மாநாடு சனிக் கிழமை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் தமிழ் செல்வி தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட துணைத் தலைவர் மல்லிகாபேகம் வாசித்தார். மாநில பொருளாளர் தேவமணி துவக்கவுரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலா ளர் சித்ரா வாசித்தார். வரவு – செலவு அறிக்கையை மாவட்ட பொருளா ளர் ராணி சமர்ப்பித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர்கள் சங்க திருச்சி மண்டல தலைவர் சீனிவாசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முனைவர் கா.பால் பாண்டி ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். மாநாட்டில் அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி திட்டத்தில் பணிநிறைவு செய்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். குறு மைய அங்கன்வாடி ஊழியர்களுக்கு முதன்மை மைய ஊழியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
10 வருடம் பணிமுடித்த தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு பணியாளர் களாக பதவி உயர்வு வழங்க வேண் டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக ஏ.மல்லிகாபேகம், மாவட்டச் செயலாளராக பி.சித்ரா, மாவட்டப் பொருளாளராக எஸ்.ராணி, மாநில செயற்குழு உறுப்பின ராக கே.கலைசெல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில தலைவர் ரெத்னமாலா சிறப்புரை யாற்றினார். மாநில பொதுச் செய லாளர் டெய்சி நிறைவுரையாற்றி னார். முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் கலைசெல்வி வரவேற் றார். மாவட்ட இணை செயலாளர் சித்ரா நன்றி கூறினார்.