மயிலாடுதுறை, டிச.1- மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாண வர்களுக்கான வட்டார அளவிலான கலைத் திருவிழா வினை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ குமார் துவக்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெறவுள்ள கலைத்திருவிழாவில் மயிலாடுதுறை ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மூன்று பிரிவுகளில் 9 வகையான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டி, நாடகப் போட்டி, பாடல், கிராமிய நடனம், இசைக்கச்சேரி, தோல் கருவி இசைக் கச்சேரி, கரகாட்டம், வில்லுப்பாட்டு, பொய்க்கால் குதிரை, கிளாசிக் நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டி களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வரு கின்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் நடைபெறும் கலைபோட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.