districts

img

முதுகுளத்தூர் வயல்களில் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

இராமநாதபுரம், பிப்.3- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூ ரில் நெல் பயிர் முதன்மை பயிராக ஏறக்  குறைய 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகு படி செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து சிறுதானியங்களான குதிரை வாலி மற்றும் உளுந்து போன்ற பயிர்  களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படு கிறது. பணப்பயிரான மிளகாய் மற்றும் பருத்தியும் மாவட்டத்திலேயே அதிக பரப்ப ளவில் முதுகுளத்தூர் வட்டாரத்தில் தான் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு ரகம் வெளியிடு வதற்கு முன் அது பல்வேறு இடங்களில் மண்  சார்ந்த காரணிகள், வானிலை சார்ந்த கார ணிகள் மற்றும் சாகுபடி சூழ்நிலைகள் போன்றவற்றில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பாக செயல்  படுபவை புதிய ரகமாக வெளியிடப்படு கிறது. இதற்கு அனுசரணை ஆராய்ச்சி என்று பெயர்.  இந்த வகையில் முதுகுளத்தூர் வட்டா ரத்தில் வெங்கலகுறிச்சி கிராமத்தில் நாக நாதன் என்பவருடைய வயலில் கேழ்வரகு பயிரில் அனுசரணை ஆராய்ச்சி திடல்  அமைக்கப்பட்டது. பயிர்களை ரகங்களாக  வெளியிடுவதற்கு முந்தைய நிலையில் பயிர் வளரும் சூழ்நிலைக்கு எவ்வாறு தங்களை தகவமைத்துக் கொள்கிறது என்பதை பரிசோதனை செய்வதற்காக கேழ்வரகு பயிரில் ஐந்து வகைகள் மேற்படி  விவசாயின் வயலில் விதைக்கப்பட்டு அனு சரணை ஆராய்ச்சி திடல் அமைக்கப்பட் டது. தற்போது மேற்படி கேழ்வரகு ரகங்கள்  அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில்  இராமநாதபுரம் மாவட்டத்தில் குயவன்குடி யில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலை யத்திலிருந்து மரபியல் துறை விஞ்ஞானி முத்துராமு, வேளாண்மை துணை இயக்கு னர் அமர்லால் மேற்படி அனுசரணை ஆராய்ச்சி திடலை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது ஒவ்வொரு கேழ்வரகு  ரகமும் எவ்வாறு நமது வட்டார கால சூழ்  நிலைக்கும் மண் வகைக்கும் தகவ மைத்துக் கொள்கிறது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.  பயிரின் உயரம், கிளைகளின் எண்ணிக்கை, கதிர்களின் எண்ணிக்கை, கதிர்களின் நீளம் முதலானவை அளவீடு செய்யப்பட்டது. மேலும் வளர்ச்சியின் போது நிலவிய வறண்ட கால சூழல் பூச்சி  தாக்குதல், நோய் தாக்குதல் போன்ற வற்றிற்கு எந்த வகை தாங்கி வளர்ந்தது என்றும் விவசாயி இடம் கேட்டு அளவீடு கள் எடுக்கப்பட்டது. ஆய்வின்போது முதுகுளத்தூர் வட்டார  வேளாண்மை உதவி இயக்குனர் கேசவ ராமன் உடனிருந்தார். இந்த அனு சரணை ஆராய்ச்சி திடலை அமைத்த வேளாண்மை அலுவலர் தமிழ் அகராதி, திடலில் இதுவரை கண்டறியப்பட்ட பல்வேறு வகையான தகவல்களை தகவல்  குறிப்புகளை மேற்படி விஞ்ஞானிகளிடம் தெரிவித்தார்.  நமது வட்டாரத்தில் நிலவும் தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தகவ மைத்துக் கொண்டு அதிகமாக மகசூல் கொடுத்த வகை புதிய ரகமாக வெளியீடு செய்வதற்கு பரிந்துரை செய்யப்படும் என்று ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தெரி வித்தனர்.