தஞ்சாவூர், பிப்.18- தஞ்சாவூர் ஆர்.வி.எஸ் வேளாண்மைக்கல்லூரி மாணவர்கள், கிராமிய வேளாண்மை அனுபவப் பயிற்சி கிராமத்தில் தங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டையில் உள்ள விவசாயிகளுக்கு, தமிழ்நாடு விவசாயிகள் பதிவேடு குறித்த விழிப்புணர்வு முகாமை நடத்தினர். விவசாயிகள் தங்களின் நில உடமை தகவல்களை சரிபார்த்து, புதுப்பித்து, அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களைப் பெறுவது முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில், மாணவர்கள் துண்டுப்பிரசுரங்களை வழங்கினர். மேலும், விவசாயிகளுடன் நேரடியாக தங்களின் நிலப் பதிவுகளை பதிவேற்ற விழிப்புணர்வு மேற்கொண்டனர். பதிவேற்றத்திற்கு தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்: ஆதார் அட்டை, நில ஆவணங்கள் (பட்டா), ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் தேவை என அறிவுறுத்தப்பட்டது. இந்த முயற்சி விவசாயிகளின் டிஜிட்டல் விழிப்புணர்வை அதிகரிக்கவும், அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறவும், சிக்கல்களைக் குறைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.