திருச்சிராப்பள்ளி, நவ.28- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மணப்பாறை ஒன்றிய மாநாடு சமத்துவப்புரத்தில் நடைபெற்றது மாநாட்டிற்கு சேதுராமன் தலைமை வகித்தார். சங்க கொடியை மாவட்டக்குழு உறுப்பினர் பத்மினி ஏற்றி னார். வேலுச்சாமி வரவேற் றார். மாநிலக்குழு உறுப்பி னர் அருட்செல்வன் துவக்க வுரையாற்றினார். சிபிஎம் வட்டச் செயலா ளர் கோபாலகிருஷ்ணன், விவசாயிகள் சங்க தலை வர்கள் சீனிவாசன், பிச் சைக்கண்ணு, சிஐடியு சுரேஷ், நவமணி, வாலிபர் சங்கம் அய்யாவு, மாற்றுத் திறனாளிகள் சங்கம் இள மாறன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட தலைவர் சுப்ரமணியன் நிறைவுரை யாற்றினார். பொருளாளர் வேலுச்சாமி நன்றி கூறி னார். தலைவராக சேதுராமன், செயலாளராக கண்ணன், பொருளாளராக வேலுச் சாமி, துணை தலைவராக பத்மினி. துணை செயலாள ராக பழனிச்சாமி உள்பட 13 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. கருப்பூர் ஊராட்சி கருத்தகோடங்கிபட்டி குறிஞ்சி நகர் பகுதியில் சாலை, தெருவிளக்கு வசதி கள் செய்துத்தர வேண்டும். கருத்தகோடங்கிபட்டி மேற்கு தெரு மக்களுக்கு சுடுகாட்டு பாதை அமைத் துத்தர வேண்டும். தாதமலை பட்டி மக்களுக்கு காவிரி குடி நீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.