districts

img

கொத்தடிமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

நாமக்கல், பிப்.7- நாமக்கல்லில் வெள்ளியன்று, கொத்த டிமை முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு சார்பில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, வெள்ளியன்று நாமக்கல் - திருச்சி சாலையிலுள்ள தனியார் அரங்கில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ஜெய குமார் வெள்ளையன் தலைமை வகித்தார். மாநில இணைச்செயலாளர் பத்ரி நாராய ணன், மாவட்டச் செயலாளர் பொன்.வீரக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநில மாக தமிழ்நாட்டினை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவோம், என வணிகர் கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.