districts

அரிசி அரவை ஆலையில் ஆய்வு

தஞ்சாவூர், ஜூலை 5 -

   தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் உள்ள நெல்  சேமிப்பு குடோன் மற்றும் வல்லத்தில் உள்ள அரிசி அரவை ஆலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தலை வர் காமினி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

   தமிழகத்தில் ரேசன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க வும், முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் தமிழகத்தில் உணவு  கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர கண்கா ணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

   மேலும் ரேசன் அரிசி கடத்து பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் எந்தவித முறைகேடும் இன்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் காமினி செவ்வாய்க்கிழமை தஞ்சைக்கு வந்தார். அவர் வல்லத்தில் உள்ள அரிசி அரவை ஆலைக்கு சென்று ஆய்வு செய்தார்.  

    அதனைத்தொடர்ந்து தஞ்சையை அடுத்த பிள்ளை யார்பட்டியில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான நெல் சேமிப்பு கிடங்கிற்கு சென்று, நெல் மூட்டைகள் உரிய முறை யில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக இயக்கம் செய்யப் படுகிறதா? என பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது நுகர்பொருள் வாணிப கழக முது நிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, உணவு கடத்தல்  தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, நுகர்பொ ருள் வாணிபக் கழக துணை மேலாளர் இளங்கோ, துணை  காவல் கண்காணிப்பாளர் சரவணன், ஆய்வாளர் முரு கானந்தம் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.