districts

திருச்சி முக்கிய செய்திகள்

தாண்டிக்குடியில் சிலம்ப சாதனை

சின்னாளப்பட்டி, பிப்.3- திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி காபி போர்டு மைய வளாகத்தில் அமே சிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகா டமி, சி அண்ட் மனோகரன்  இலவச கல்வி அறக்கட் டளை சார்பாக சிலம்ப சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், காபி மண்  டல ஆய்வு மைய இணை  இயக்குநர் எம்.ஜெயக் குமார் மற்றும் பி.ஆர்.எம். ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையேற்று சிறப்புரை யாற்றினர். தாண்டிக்குடி காவல்நிலைய சார்பு ஆய்  வாளர்கள் ஜெயசீலன், ஜெயக்குமார், வெள்ளைச் சாமி, தமிழ்நாடு கலை இலக்  கியப் பெருமன்ற மாவட்டச் செயலாளர் சு.பிரபாகரன், சி அறக்கட்டளை  கண்ணன்,  பசுமை வாசல் கோகுல்நாத், திமுக ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் ஜி.திலீப், தாண்  டிக்குடி சரவணகுமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  இன்டர்நேஷனல் ஸ்டார்  புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனர் மற்றும் சேர்மன் தூதுவர் ஜெ. அரவிந்த் குமார் முன்னிலை யில், 10க்கும் மேற்பட்ட சில ம்ப ஆசான்களின் வழிகாட்டு தலின்படி 150க்கும் மேற்பட்ட  சிலம்ப மாணவர்கள் ஒற் றைக்காலில் நின்று 3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். இன்டர்நேஷனல் ஸ்டார் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவன குழுவினர் அரவிந்த் குமார், ராஜேஷ், ஸ்ரீநாத் மற்றும் புருசோத்தமன் ஆகியோர் இச்சாதனையை  நிகழ்த்திய மாணவர்களுக்கு   சான்றி தழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர். இந்நிகழ்வில் தாண் டிக்குடி நாகம்மாள் நினைவு உயர்நிலைப்பள்ளி ஆசிரி யர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடு களை ஆத்தூர் அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆசான் செந்தில்குமார், பயிற்சியாளர் லெனின் குமார் ஆகியோர் செய்தி ருந்தனர்.

மீனவர்கள் வலையில் சிக்கிய கடல் பசு மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது

தஞ்சாவூர், பிப்.3 -  பேராவூரணி அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய  அரிய வகை கடல்வாழ் உயிரினமான கடல் பசு மீண்டும்  கடலுக்குள் உயிருடன் நல்ல நிலையில் விடப்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகம், பேராவூரணி அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில்,  மீனவர் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான படகில் மீன வர்கள் மீன் பிடித்து கரைக்கு திரும்பினர். அப்போது மீனவர்கள் வலையில் அரியவகை கடல் வாழ் உயிரி னமான சுமார் 7 அடி நீளமுள்ள கடல் பசு சிக்கி யிருந்தது தெரிந்தது. இதையடுத்து மீனவர் பிரபாகரன் மற்றும் அவரைச் சார்ந்த 14 மீனவர்கள் வலையை அறுத்து, கடல் பசுவை நல்ல நிலையில் மீண்டும் உயிருடன் கடலுக்குள் விட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.ஆர்.சந்திரசேகரன், “மாவட்ட வன  அலுவலர் உத்தரவின்படி, விரைவில் விழா நடத்தி, மீனவர்களைப் பாராட்டி ரொக்கப் பரிசு வழங்கப்படும். வனத்துறை, மீன்வளத்துறை, சமூக அமைப்புகள் இணைந்து, மீனவ மக்களிடையே தொடர்ந்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வருவதன் எதிரொலியாக, இதுவரை  மீனவர்கள் வலையில் உயிருடன் சிக்கிய ஏராளமான கடல் பசுக்கள், அரியவகை கடல் ஆமைகள் மீண்டும் உயி ருடன் கடலுக்குள் விடப்பட்டு வருகின்றன” என தெரிவித் தார். 

குறைதீர் கூட்டத்தில் 237 மனுக்கள் அளிப்பு

.பெரம்பலூர், பிப்.3 - பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு  தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 237 மனுக்கள் பெறப் பட்டன. ஒவ்வொரு மனுவின் மீதும் தனிக்கவனம் செலுத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த  வார மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட  வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார். 

மாரியம்மன் கோயில் ஊராட்சியை  மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

தஞ்சாவூர், பிப்.3 -  தஞ்சை மாரியம்மன் கோயில் ஊராட்சியை, தஞ்சாவூர்  மாநகராட்சியுடன் இணைக்கும் உத்தரவை மறுபரி சீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 50-க்கும்  மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் பா.பிரியங்கா பங்க ஜத்திடம் மனு அளித்தனர். அந்த மனுவில், “எங்கள் பகுதியில் உள்ள பொது மக்கள் பெரும்பாலும் விவசாயக் கூலித் தொழிலாளர் கள்தான். வறுமையான நிலையில் குடும்பத்தை நடத்தி  வருகிறோம். கூலி வேலை மற்றும் நூறு நாள் வேலையின்  மூலம் கிடைக்கும் வருமானத்தை தவிர வேறு எந்த வகையிலும் எங்களுக்கு வருமானம் இல்லை. இந்நிலையில் மாரியம்மன் கோவில் ஊராட்சியை தஞ்சை மாநகராட்சியுடன் இணைக்கும் உத்தரவு நிறை வேற்றப்பட்டால், நூறு நாள் வேலை செய்யும் நாங்கள்  வேலை இழந்தும் அதிகமான வரி செலுத்தும் நிலை  உருவாகும். ஏற்கனவே வறுமை நிலையில் உள்ள எங்களால் இந்த வரியை கட்ட முடியாத நிலை ஏற்படும்.  எனவே, எங்கள் வாழ்வாதாரத்தின் நலன் கருதி மாரியம்மன் கோவில் ஊராட்சியை தஞ்சை மாநக ராட்சியுடன் இணைக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் மதிய உணவு  தாமதத்தால் மாணவர்கள் சோர்வு

இராமநாதபுரம், பிப்.3- இராமநாதபுரம் மாவட் டம், திருவாடானை அருகே ஆதியாகுடி அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று  முதல் ஆறாம் வகுப்பு வரை  உள்ளது. சுற்றி உள்ள கிரா மங்களில் இருந்து பள்ளிக்கு மாணவர்கள் வருகின்றனர். இதில் பள்ளியில் அரசு சார்பாக மதிய உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு மதிய  உணவு வழங்குவதில் தாம தம் ஏற்படுவதால் மாண வர்கள் சோர்வடைந்துள்ள னர். இந்த பள்ளியில் 6  மாணவர்கள் கல்வி பயின்று  வருகின்றனர். தொடர்ந்து இதே நிலை நீடித்து வருவ தாகவும் சொல்லப்படுகிறது. மாணவர்கள் பட்டினி யுடன் கல்வி பயில வேண்டிய  அவல நிலை இருப்பதாக கவலை தெரிவித்தனர்.  இது பற்றி விசாரித்த போது, தொடர்ந்து இந்த பள்ளிக்கு மதியம் 2.30 மணிக்கு மேல்தான் மதிய  உணவு கொண்டு வருவதாக வும், பலமுறை புகார் கொடு த்தும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படாத நிலை உள்ளது. இதனால் மாண வர்கள் பட்டினியுடன் இருப்ப தால் சோர்வடைந்து வருவ தாக தெரிவித்தனர். மாவட்ட  நிர்வாகம் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.  இது தொடர்பாக உணவு  வழங்கும் பொறுப்பாளரிடம் விசாரித்தபோது, கோவணி அரசு பள்ளியில் இருந்து சமைத்து ஆதியாகுடி பள்  ளிக்கு கொண்டு வர வேண்டி  உள்ளதால் தாமதம் ஏற்படு வதாக தெரிவித்தார்.

தகர செட்டில் பட்டாசுத் திரி தயாரித்தவர் கைது

ஏழாயிரம்பண்ணை, பிப்.3- ஏழாயிரம்பண்ணை அருகே தகர செட்டில் பட்டா சுக்கான திரிகளை தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர். ஏழாயிரம்பண்ணை காவல்நிலைய சார்பு ஆய்வா ளர் ஹரிராம் தலைமையிலான போலீசார், அன்பின் நகரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, ஏசுக்கனி (52) என்பவருக்கு சொந்தமான தகர செட்டில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் திரிகள் அனுமதியின்றி தயார் செய்வது தெரியவந்தது. இதையடுத்து, திரிகளை பறிமுதல் செய்த போலீசார்  ஏசுக்கனியைக் கைது செய்தனர். 

ஏர்வாடி எலைட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா    

இராமநாதபுரம், பிப்.3- இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள எலைட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 24 வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு  எலைட் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் முகமது அலி ஜின்னா  தலைமை தாங்கினார். பொருளாளர் சையது அப்பாஸ் இப்ரா ஹிம் முன்னிலை வகித்தார். முதல்வர் ஆர்.வசந்தி  வரவேற்புரையாற்றினார். இதில் ஏர்வாடி தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் நிலைய அலுவலர் அருள்ராஜ், கட்டிட கட்டுமான ஆலோ சகர் சையத் ருக்னுதீன் இப்ராஹிம் ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளராக ஏர்வாடி காவல்  ஆய்வாளர் ஜீவரத்தினம் மற்றும் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்  மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.  பின்பு மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. இறுதியாக உதவி முதல்வர் நன்றி கூறினார்.

வாகன ஓட்டிகளை குழப்பத்தில் ஆழ்த்தும் பெயர் பலகை

சின்னாளப்பட்டி, பிப்.3- திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் கொடைரோட்டை அடுத்த பொட்டிக்குளம் பிரிவு அருகே, மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் சாலையில் தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்கும் கொடைரோடு சுங்கச்  சாவடி விரிவாக்கம் சார்பில் நிலக்கோட்டை, வத்தல குண்டுக்குச் செல்லும் சாலையை மதுரைக்கு செல்லும் சாலை என தவறான அம்புகுறி பொறிக்கப்பட்ட பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதால் கொடைக்கானல், வத்தலக்குண்டு, வாடிப்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் மதுரைக்கு செல்வதாக நினைத்து நிலக்கோட்டைக்கு சென்று பல கிலோமீட்டர் சுற்றி விசாரித்து மீண்டும் மதுரைக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி குழப்பம்  ஏற்பட்டு இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவ துடன், ஓட்டுநர்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும் சரியான நேரத்திற்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படுவ தாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால்  சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை யினர் சார்பில் தவறான பெயர் பலகையை உடனடியாக மாற்றி  வைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

8 நாட்களுக்கு ஈரோடு - செங்கோட்டை ரயில் பகுதி தூரம் ரத்து

 திருநெல்வேலி, பிப்..3- ஈரோடு-நெல்லை இடையே இயக்கப்பட்டு வந்த ரயில், கடந்த ஓராண்டாக செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்பட்டு, ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரசாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப் பட்டு கரூர், திண்டுக்கல் கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திரு மங்கலம், விருதுநகர்ல சாத்தூர், கோவில் பட்டி, கடம்பூர், வாஞ்சி மணியாச்சி, நெல்லை, சேரன்மகாதேவி, கல்லி டைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழகடையம், பாவூர்சத்திரம், தென் காசி வழியாக செங்கோட்டைக்கு இரவில் செல்கிறது. மறுமார்க்க மாக செங்கோட்டை யில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்பட்டு, நெல்லை வழியாக ஈரோடு செல்கிறது. சேலம் கோட்டத்தில் நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த விரைவு ரயிலா னது, திங்கட்கிழமை 3ஆம் தேதி 6ஆம் தேதி வியாழன், 8ஆம் தேதி சனி, 10ஆம் தேதி திங்கள், 20ஆம் தேதி வியாழன், 23ஆம் தேதி ஞாயிறு, 25ஆம் தேதி செவ்வாய், 28ஆம் தேதி வெள்ளி ஆகிய 8 தினங்களும் ஈரோடு-கரூர் இடையே இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது. அதாவது செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் கரூர் வரை மட்டுமே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதயாத்திரை: சாலையை சீரமைக்க கோரிக்கை

சின்னாளப்பட்டி, பிப்.3- திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவில் தைபூசத்தை யொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை யாக வருவார்கள். தமிழக அரசு மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்  சார்பில் பாதயாத்திரை செல்லும் வழிகளில் நெடுஞ்சாலை  துறையினர் சாலையோரங்ளையும், உள்ளாட்சித் துறை யினர் சாலை மற்றும் குறுக்கு சாலைகளையும் தெருக் களையும்  சரிசெய்து பக்தர்களுக்கு தேவையான மின் விளக்கு, சுத்தமான குடிநீர், சுகாதார வளாகம் மற்றும் மருத்துவ வசதிகளை அமைத்து தருவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் தைப்பூச விழாவை முன்னிட்டு மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவ கங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து அதிக அள விலான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்ல துவங்கி உள்ளனர். எனினும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியும் உடனடியாக அதற்கான ஏற்பாடு களை செய்யாமல் உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சா லைத்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.

அருமனையில் கடும் போக்குவரத்து நெருக்கடி: 2 மணி நேரம் பரிதவித்த மக்கள்

அருமனை, பிப். 3- கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை -ஆலஞ் சோலை சாலையில் புண்ணியம் முதல் அருமனை மேலத்தெரு வரை கடுமையான போக்கு வரத்து நெருக்கடி அவ்வப்போது ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத் துறையிடம் ஆக்கிரமிப்பை அகற்றி விரிவுபடுத்திசீர் செய்ய பல்வேறு மனுக்கள் கொடுத்தும் கண்டுகொள்ளாத நிலையில்  உள்ளது. தற்போது கனக கனரக வாகனங்கள் அதிகமாக இச்சாலை  வழியாக செல்கிறது. தொடர்ந்து அருமனை சந்திப்பில் மதுபான கடையும் செயல்பட்டு வருகிறது. இதனால் ஏற்கனவே நெருக்கடிகள் இருந்து வந்த  நிலையில் தற்போது கனரக வாகனங்கள் செல்வதால்கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிக்கித்  தவிக்கின்றனர். இதைத் தொடர்ந்து புண்ணியம் பகுதியில் 2 திருமண மண்ட பங்கள் உள்ளன. திருமணமண்டபத்தில் வாகனங்கள் நிறுத்துவதற் காக அனைத்து ஏற்பாடுகளும் மண்டபம் நிர்வாகம் சார்பில்  செய்யப்பட்டு உள்ளது. இருந்தாலும் வாகன ஓட்டிகள் புண்ணியம் சந்திப்பில் சாலை யின் இரு புறமாக போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திச்  செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை  2 திருமண மண்டபங்களிலும் திருமணம் நடைபெற்றுக்  கொண்டிருந்தது. இந்த நிலையில் திருமணத்திற்காக வந்த வாகனங்கள்  அனைத்தும் புண்ணியம் சந்திப்பில் இரு புறமாக நிறுத்தியதால் வாக னங்கள் போக முடியாமல் திக்கு முக்காடியது. இதனால் அப்பகுதியில் சுமார்  2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. அப்பகுதியில் உள்ள இளைஞர்களும் பகுதி மக்களும் வாக னங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க சாலை யின் இரு புறமும் இருக்கக்கூடியஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீர்  செய்ய வேண்டுமென பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.