districts

17 வயது சிறுமியை தனியறையில் விசாரித்த எஸ்.ஐ யிடம் உயர்மட்ட விசாரணை நடத்தப்படுமா?

விருதுநகர், நவ.28-  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 17 வயது சிறுமியை பெண்  காவலரின்றி  தனியறையில் விசாரித்த காவல் சார்பு ஆய் வாளரிடம் பெண் உயர் அதிகாரி தலைமையில் விசாரிக்கக் குழு அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.   அருப்புக்கோட்டை  தாலுகா காவல்நிலையத்  தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்தவர் முத்துக் குமார். இவர் நரிக்குடி காவல்நிலையத்திலிருந்து சில மாதங்களுக்கு முன்பு தான் இங்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   இந்த நிலையில், பெண் ஒருவர், பிளஸ் 2 படிக்கும் தனது 17 வயது மகளை காணவில்லையென கடந்த  நவம்பர் 19ல் புகார் அளித் துள்ளார். இதையடுத்து, நவம்பர் 26 அன்று ஒரு வழக்  கறிஞருடன் மாணவி காவல்  நிலையத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கிருந்த சார்பு ஆய்வாளர் முத்துக் குமார், மாணவியை விசா ரிக்க வேண்டும் எனக் கூறி  அவரை போலீசாரின் ஓய்வ றைக்கு அழைத்துச் சென்  றுள்ளார். மேலும், அச்சிறு மியிடம் தனது செல்போன் எண்ணை கொடுத்து பேசு மாறு கூறினாராம். இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனுக்கு தகவல் தரப் பட்டது. இதையடுத்து, சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.   இச்சம்பவம் குறித்து  விசாரிக்க அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி., மதிவாணனுக்கு உத்தரவிடப்பட்ட நிலையில்,  எஸ்.ஐ., ஓய்வு அறைக்கு தனி யாக கூட்டி சென்று விசா ரித்தது தெரிந்தது. இது குறித்து அவர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இருந்த போதும், இந்த  சம்பவத்தில் பல்வேறு விதி மீறல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமியை காவலர் ஓய்வ றையில் வைத்து சார்பு ஆய்  வாளர் முத்துக்குமார்  விசா ரித்த போது பெண் போலீ சார் யாரும் அங்கில்லை.  மேலும், காவல்நிலையத் தில் விசாகா கமிட்டி உறுப்பி னரும் அருகில் இல்லை. அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்  என உத்தரவு உள்ளது.  ஆனால், அருப்புக்கோட்டை  தாலுகா காவல்நிலையத் தில் விசாகா கமிட்டி உள்  ளதா? அதற்கு யார் பொறுப்பு  என்ற தகவலும் இல்லை.   மேலும், மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் இந்நட வடிக்கையானது, கண்துடைப்பாக உள்ளது எனவும், இதுபோன்ற செயல்களில் தனி நபர் யாராவது ஈடுபட்டிருந்தால் வழக்கு விசாரணை எவ்  வாறு நடைபெற்று இருக் குமோ அதேபோல் விசா ரணை நடத்திட வேண்டும்  எனவும், 17 வயது சிறுமி யிடம், விதிமுறைகளை பின்பற்றாமல்  தனியாக விசா ரித்த சார்பு ஆய்வாளர் முத் துக்குமாரிடம், பெண் உயர் அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்திட விருதுநகர் மாவட்ட  ஆட்சியர் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் கோரி க்கை விடுத்துள்ளனர்.