திருவாரூர், அக்.21 - திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் கடந்த 18 வருடங்களாக உள்ள டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் சுமார் 65-க்கும் மேற்பட்டோர் லாரிகளில் மதுபான பாட் டில்களை ஏற்றவும், டாஸ்மாக் கடை களில் அவற்றை இறக்கும் பணியை செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது புதிய தொழிலாளர்களை வேலைக்கு ஒப்பந் ததாரர் சேர்த்ததால், ஏற்கனவே 18 வருடங்களாக வேலை பார்க்கும் தொழி லாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து 200-க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும் பங்களுடனும் சிஐடியு உறுப்பினர்களுடனும் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். 18 ஆண்டுகளாக பணிபுரியும் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, தீபாவளி போனஸ் ரூ.8,400 வழங்க வேண்டும். வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். பேச்சு வார்த்தை என்ற பெயரில் ஒப்பந்ததாரர் களுக்கு ஆதரவாக செயல்பட்ட திருவா ரூர் வருவாய் கோட்டாட்சியர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர் ரஞ்சித், கிரிதரன் ஆகியோருக்கு வேலை இழப்பை ஏற்படுத்தி, அவர்களின் தற் கொலை முயற்சிக்கு காரணமான ஆளுங்கட்சி நகரச் செயலாளர் வாரை எஸ்.பிரகாஷ் மீது வழக்குப் பதிந்து காவல்துறை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் கே.கஜேந் திரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா, சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட பொருளாளர் இரா.மாலதி மற்றும் சிஐடியு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவாரூர் வருவாய் கோட்டாட்சி யர் மற்றும் வட்டாட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என சுமைப்பணி தொழிலா ளர்கள் தெரிவித்துள்ளனர்.