districts

img

குடும்ப வன்முறையால் படுகாயமடைந்த பெண்ணை டிஸ்சார்ஜ் செய்த மருத்துவர் சிபிஎம் முயற்சியால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

மன்னார்குடி, ஜூலை 23 - கணவனால் வெட்டுண்டு படு காயமடைந்த பெண் மருத்துவமனை யிலிருந்து அராஜகமாக டிஸ் சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சிபிஎம்  நடவடிக்கையால் மீண்டும் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி வட்டம் தலையாமங்கலம் அம்பல காரத் தெருவைச் சேர்ந்தவர் அனிதா. இவர் எம்எஸ்சி உணவு முறை வல்லுனர். இவரது தந்தை  ஆனந்தராஜ் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் உறுப்பினராக உள்ளார். அனிதாவிற்கும், மன்னார் குடி சேரன்குளம் கிராமத்தைச் சேர்ந்த தீனதயாளன் என்பவருக் கும் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.  இவர்களுக்கு இரண்டரை வயதில்  ஒரு பெண் குழந்தை உள்ளது. அனிதா தன் கணவருடன் சேரன் குளம் கிராமத்தில் இரண்டு மாதம் மட்டும் வாழ்ந்தார். மாமனார்-மாமி யார் கொடுமையின் காரணமாக வேறு வழியின்றி, பிறந்த ஊரான தலையாமங்கலத்திற்கு வந்துவிட் டார். அங்கு அவரது கணவர் அடிக்கடி  வந்து தகராறு செய்துள்ளார்.  இதுகுறித்து பலமுறை அனிதா மன்னார்குடி மகளிர் காவல் நிலை யத்தில் புகார் செய்தும் நட வடிக்கை எடுக்கப்படவில்லை. சேரன் குளத்தில் கணவர் வீட்டில் இருந்த போது அவரது மாமியாரும்-மாமனா ரும் அவரை அடித்து துன்புறுத்தி யுள்ளனர்.  சம்பவத்தன்று புதன்கிழமை (ஜூலை 20) இரவு 7.30 மணியள வில் தீனதயாளன் தலையாமங்கலத் திற்கு வந்து குடிபோதையில் அனிதா விடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது, மறைத்து வைத்திருந்த கத்தியால் அனிதாவின் தலை,  கழுத்து, கை போன்ற இடங்களில்  வெட்டி படுகாயத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிஓடி விட்டார். மகளின்  அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஆனந்தராஜ் மற்றும் அவரது மனைவி, மகளை மீட்டு மன்னார் குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் உள்நோயாளியாக சேர்த்தனர்.  வெட்டுபட்ட அனிதாவிற்கு தலை யில் தையல் போட்டுக் கொண்டிருந்த போதே  காவல்துறையினர் அவரி டம் இருந்து வாக்குமூலம் பெற்ற னர் எனவும், ஆனால் அனிதா  கூறியது போல் வழக்கு பதியப்படவில்லை எனவும், தனது மகள் திருமணம் ஆன ஒருசில மாதங்களுக்கு பிற கிருந்தே நிம்மதியாக வாழவில்லை என்றும் ஆனந்தராஜ் கூறினார்.  தலையாமங்கலம் காவல் நிலை யத்தில் கு.எண்.32/2022 பிரிவு 294 (பி), 452, 324, 506(2) இந்திய தண்ட னைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப் பட்டுள்ளது. உள்நோயாளியாக இருந்த அனிதாவை மருத்துவர் ராம கிருஷ்ணன் ஜூலை 22 (வெள்ளிக் கிழமை) அன்று திடீரென டிஸ்சார்ஜ்  செய்தார்.  தகவல் அறிந்த கட்சியின் ஒன்றிய-நகர-இடைக் கமிட்டிகள் சாலை மறியல் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன், ஒன்றியச் செயலாளர் ஜெயபால், கட்சி உறுப்பினர்கள் கே.டி.கந்த சாமி, டி.ஜெகதீசன், ஜி.முத்து கிருஷ்ணன், ஏ.பி.தனுஷ்கோடி, ஏஎஸ்ஆர் வீரசேகரன் உள்ளிட் டோர் மருத்துவமனை கண்காணிப் பாளரும் மருத்துவருமான விஜய குமாரை சந்தித்து பேசினர். இதனால் காயமடைந்த அனிதா வின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, மீண்டும் அவரை உள்நோ யாளியாக சேர்ப்பதாக மருத்துவர் விஜயகுமார் கூறினார். பாதிக்கப் பட்ட அனிதா தற்போது மருத்துவ மனையில் சிகிச்சையில் உள்ளார்.