districts

ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தப்படும் தூய்மை பணியாளர்கள் நகராட்சி ஆணையர் மீது சிஐடியு குற்றச்சாட்டு

திருவாரூர், ஜூலை 20 -  திருவாரூர் நகராட்சியில் பணிபுரி யும் தூய்மை பணியாளர்கள் நகர்ப் புறங்களை தூய்மையாக வைத்திருப்ப தில் முழு பங்களிப்பு செய்கின்றனர். ஆனால் அவர்களை அந்த வேலையில்  மட்டுமின்றி பிற வேலைகளிலும் நக ராட்சி ஆணையர் ஈடுபடுத்துவதாக புகார்  எழுந்துள்ளது.  குறிப்பாக பனகல் சாலையில் உள்ள குளத்தில் ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்த தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சி ஆணை யர் உத்தரவிட்டுள்ளார். இந்தப் பணி கள் செவ்வாயன்று முதல் நடைபெறு கிறது. சுமார் மூன்று அடிக்கு மேல் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடி கள் குளத்தின் மேலே காடுகளைப் போல வளர்ந்துள்ளன. அதில் விஷத் தன்மை உள்ள பாம்புகள் மற்றும் பல்வேறு கிருமிகள் இருக்கும் நிலை யில், தூய்மை பணியாளர்கள் அச்சத்து டன் அந்த ஆகாயத்தாமரை செடிகளை  அகற்றி வருகின்றனர்.  இச்செயல் ஆணையரின் அதிகார துஷ்பிரயோகத்தை காண்பிக்கிறது. ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும்  பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியா ளர்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால்,   நகராட்சி ஆணையர் மற்றும் நகர நிர்வாகமே முழுவதும் பொறுப்பேற்க வேண்டும். நகராட்சி பகுதிக்கு உட்பட்ட குளங்கள் நகராட்சிக்கு சொந்த மாக இருந்தாலும் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகளை தூய்மை பணியா ளர்கள் மூலம் செய்வதை நிர்வாகம் உட னடியாக நிறுத்த வேண்டும் என சிஐடியு  திருவாரூர் மாவட்டக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.  நகராட்சியில் பணிபுரியும் மற்ற ஊழி யர்களைப் போல தூய்மை பணியாளர் களையும் நடத்திட வேண்டும்.  எட்டு மணி நேர வேலை, அவர்களுக்கு உரிய சமூக பாதுகாப்பு உள்ளிட்ட வற்றை அளிப்பதே சிறந்த நிர்வாகமா கும். தொடர்ந்து இது போன்ற பணி களை செய்யச் சொல்லி வற்புறுத்தி னால் நகராட்சி ஆணையருக்கு எதிராக  போராட்டம் நடத்த நேரிடும் என சிஐடியு  மாவட்டச் செயலாளர் டி.முருகையன் தெரிவித்துள்ளார்.