districts

ஒரே நாளில் 12 இடங்களில் ஓஎன்ஜிசி நலத் திட்டப் பணிகள்  

மன்னார்குடி, ஏப்.29 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சித்தமல்லி ஆரம்ப சுகாதார நிலையத் திற்கு ஓ.என்.ஜி.சி சார்பில் மருத்துவ உபகரணங்கள், சோதனைக் கருவிகள். ஸ்டிரெச்சர், தள்ளுவண்டி உள்ளிட்டவற்றை செல்வ ராஜ் எம்.பி, ஆரம்ப சுகாதார  நிலைய பொறுப்பு மருத்துவ ரிடம் வழங்கினார். மேலும்  கோட்டூர் ஒன்றி யம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நலத்திட்ட உதவி கள், விழல் கோட்டகம் பள்ளிக்கு நவீன சுத்திகரிப்பு இயந்திரம், வாட்டார் கிரா மத்தின் முக்கிய வீதி மற்றும் கிழக்கு வீதியில் மணிக்கு 1000 லிட்டர் சுத்திரிகரிப்பு திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், தெற்கு வாட்டார் மேலத் தெருவில் 1000 லிட்டர் கொள் ளளவு கொண்ட நீர்த் தேக்க தொட்டி, நீடாமங்க லம் வெள்ளக்குடி பஞ்சாயத் தில் ரேசன் கடை, சிறு சமு தாயக்கூடம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு செல்வராஜ் எம்.பி. திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி சார்பில் குழும பொது மேலாளர்கள், சமூகப் பொறுப் புணர்வுத் திட்ட அதிகாரிகள் மற்றும் ஓ.என்.ஜி.சி பகுதி அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர்கள், பள்ளி ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.