திருத்துறைப்பூண்டி, செப்.18 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி ஒன்றியத்தில் உள்ள விளக்குடி கிரா மத்தில் 25 இளைஞர்கள் பல்வேறு கட்சி யில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு சிபிஎம் விளக்குடி கிளைச் செயலாளர் நாக.அறிவழகன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ் முன்னிலை வகித்தார். விளக்குடி கிராமத்தில் பல்வேறு கட்சி இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த இளைஞர்களுக்கு, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், ‘காவிரி டெல்டா- உள்ளும் புறமும்’ என்ற புதினத்தை வழங்கினார். பின்னர் புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரத்தில் செங்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினர். தொடர்ந்து விளக்குடி கடைவீதி, வெள் ளாளர் தெரு, அரசமரத்தடி தெரு உள்ளிட்ட 10 இடங்களில் செங்கொடி ஏற்றப்பட்டது. மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி யன், ஆறு.பிரகாஷ், ஒன்றியக் குழு உறுப்பி னர் மாலா உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.