திருத்துறைப்பூண்டி, ஜூலை 21- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி ஒன்றியத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் போதிய மருந்து வசதிகள் இல்லாததால் ஜூலை18 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருத்துறைப் பூண்டி நகரக் குழு சார்பில் தலைமை மருத்து வமனை மருத்துவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவில், பயிற்சி மருத்துவர் அல்லாது பொது மருத்துவர்கள் 24 மணி நேரமும் மருத்துவமனையில் இருக்க வேண்டும், நோயாளிகளுக்கு போதிய மருந்து மாத்தி ரைகள் இல்லை, கூடுதலாக இருப்பு வைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண் டும், அவசர சிகிச்சை பிரிவிற்கு மருத்து வர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், தலைமை மருத்து வர் சிவக்குமார், மருந்தாளர்கள் மருத்துவ மனை உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை குறித்து பேசியதால், மருந்து மாத்திரைகள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டன. இதனையறிந்த சிபிஎம் நகரக் குழு செயலாளர் கே.கோபு, மாவட்டச் செயற் குழு உறுப்பினர் கே.தமிழ்மணி, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன், நகரக் குழு உறுப்பினர்கள் எம்.பி.கே.பாண்டி யன், ஏ.கே.செல்வம், தமிழ்மணி உள் ளிட்டோர் தலைமை மருத்துவருக்கும், மருந்தாளர்களுக்கும் மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். மேலும் பொது மருத்துவர்களையும், அவசர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவர்களையும் நியமிப்பதற்கு விரை வாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வும் கேட்டுக் கொண்டனர்.