மன்னார்குடி, பிப்.2 - சிஐடியு திருவாரூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டை 15.2.2022 அன்று மன்னார்குடி யில் நடத்துவதென நகர பேரவை தீர்மா னித்துள்ளது. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மன்னார்குடி நகர பேரவை கே.கணேசன் தலைமையில் நடைபெற் றது. வரவேற்புக் குழு தலைவராக பொன் ஆறுமுகம், செயலாளராக ஜே.செல்வ குமார், பொருளாளராக ஆ.ஹரிஹரன் மற்றும் எம்.எம்.ராஜு, பி.ராஜு, புரு ஷோத்தமன், பி.சக்திவேல் ஆகி யோரை பொறுப்பாளர்களாக கொண்ட மாநாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. மாவட்ட தலைவர் ஏ.நபி, மாவட்ட செயலாளர் எம்.கே.எம். அனிபா, மாவட்ட துணைத்தலைவர் ஏ.கே.எஸ். செல்வம், சிஐடியு மாவட்ட துணைத்த லைவர் ஜி.ரகுபதி பேசினர்.