காஞ்சிபுரம், ஜூன் 16 ஆலை மூடலில் பணி இழந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என சிஐடியு காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. சிஐடியு காஞ்சிபுரம் மாவட்ட 11வது மாநாடு ஞாயிறன்று (ஜூன்16) காஞ்சி புரத்தில் தோழர் முனுசாமி நினைவரங்கத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் தலைமையில் நடை பெற்றது. மாநாட்டுக் கொடியை மாவட்ட துணைத் தலைவர் பி.மாசிலாமணி ஏற்றிவைத்தார். வரவேற்புக் குழுத் தலைவர் டி.சிறீதர் வர வேற்றார். மாநாட்டைத் துவக்கி வைத்து சிஐடியி மாநில துணைத்தலைவர் இ.பொன்முடி பேசினார். மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் மதுசூதனன் வரவு செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் கே.பழனிவேல், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செய லாளர் சாரங்கன் ஆகியோர் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் பேசினார். வரவேற்புக் குழு செயலாளர் என்.நந்த கோபால் நன்றி கூறினார். தீர்மானங்கள் ஆலைமூடல் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தைக் கைவிடவேண்டும், நல வாரியங்களில் பதிவு செய்தவர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக உள்ளதைக் காரணம் காட்டி இயற்கை மரணம் ஓய்வூதியம், உதவித்தொகைகள் வழங்க மறுப்பதை அரசு கைவிட வேண்டும், சுமைப்பணி தொழிலாளர்களுக்குத் தனி நலவாரியம் அமைக்க வேண்டும், அத்தியாவசிய பணியான குடிநீர் திட்டங்க ளில் காலிப் பணி யிடங்களைப் பூர்த்தி செய்வதுடன் போதுமான ஆட்களை நியமித்துப் பாது காக்கப்பட்ட குடிநீர் வழங்கிட வேண்டும், பாலாற்றில் போதிய புதிய தடுப்பணை களைக் கட்ட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும், குடிநீர் விற்பனை யைத் தடுத்து நிறுத்திட வேண்டும், கல்பாக்கம் சென்னை அணுமின் நிலையத்தில் தொழிலக கூட்டுறவுச் சங்கம் மூலம் கடந்த32 வருடங்களுக்கும் மேலாக பணி செய்துவரும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்குச் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கிட வேண்டும், அணுமின் நிலைய வேலைவாய்ப்பில் கல்பாக்கம் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு முன்னு ரிமை வழங்க வேண்டும், தமிழக அரசு மணல் தட்டுப்பாட்டை உடனடியாக போக்கி கட்டுமான தொழி லாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்க ளுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழக்கிடுவதுடன், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மாதம் 6000 ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களின் தொழிலாளர்களின் தொழிலகப் பாதுகாப்பு சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தொழிற்சங்கம் அமைத்தால் அதை ஏற்க மறுத்து பணிநீக்கம் பணியிடை நீக்கம் என மிரட்டி வருகின்ற னர் இதனைத் தடுக்கும் வகையில் தொழிற்சங்க உரிமைகளை உறுதி செய்ய தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் மாவட்டத் தலைவராக எஸ்.கண்ணன், செயலாள ராக இ.முத்துக்குமார், பொருளாளராக ஜீ.வசந்தா உள்ளிட்ட 64 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.