திருவண்ணாமலை,ஜூலை.11- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சிக்குட்பட்ட நீர் நிலைப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகள் வரும் 13ம் தேதி முதல் அகற்றப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் வீடு இல்லாத மக்களுக்கு வேறு இடங்களில் இடம் ஒதுக்கீடு செய்து அரசே வீடு கட்டி தரத் வேண்டும். அதுவரை முதலமைச்சர் சட்டசபையில் அறிவிப்பு செய்ததற்கு இணங்க வீடுகளை இடிக்க கூடாது என்ற கோரிக்கை மனுவினை போளுர் கிராமமக்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார், மாவட்ட செயற்குழுஉறுப்பினர் எம். வீரபத்திரன் தலைமையில் துணை வட்டாட்சியரிடம் அளித்தனர்.