districts

img

சிறுபான்மை மக்களுக்கு கடன் உதவி வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்

திருவண்ணாமலை,மார்ச். 16- சிறுபான்மை மக்களுக்கு கடன் உதவி வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம் செய்யாறு வட்டாட்சியர் அலு வலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் முகாம்கள் நடத்தி சிறு பான்மை மக்களுக்கு கடன் உதவி அளிப்பதாக கொடுக்கும் வாக்குறுதி கண்துடைப்பு நாடகத்தை கைவிட வேண்டும், கொரோனா சூழலுக்கு முன்பாக மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட கடன் உதவி முகாம்களில், அளிக்கப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக கடன் உதவி அளிக்க வேண்டும். டாம்கோ திட்டத்தின் மூலமாக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பாக கடன் உதவிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுகொடுக்கும் இயக்கம் நடை பெற்றது. இந்த இயக்கத்திற்கு ஷேக் இஸ்மாயில் ஷரீப் தலைமை தாங்கினார், தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலாளர் ஏ. அப்துல் காதர் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செய லாளர் எம். ராமகிருஷ்ணன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செய லாளர் ப. செல்வன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம் .வீரபத்திரன், சிபிஎம் வட்டார செயலாளர் டி. வெங்கடேசன், வே .சங்கர், வாலிபர் சங்க வட்டார செயலாளர் மா.மணி கண்டன் உள்ளிட்டோர் உரை யாற்றினர்.