districts

img

சிபிஎம் முயற்சியால் பழங்குடியினருக்கு பட்டா

திருவண்ணாமலை, ஏப்.27- திருவண்ணாமலை மாவட்டம் பெரண மல்லூர் பேரூராட்சியில் வசிக்கும் 11 பழங்குடியினர் குடும்பங்களுக்குப் பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து 8 குடும்பங்க ளுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் 3 குடும்பங்களுக்குப் பட்டா வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. மீண்டும் கட்சியின் சார்பில் விடுபட்ட 3 பேருக்கும் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து வந்த வாசி வட்டம் சென்னாவரத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வட்டாட்சி யர் திருஞான சம்மந்தன் ஆகியோர் சிவ ரஞ்சனி, சசிகலா, தங்கம்மாள் ஆகிய மூவருக்கும் பட்டாக்களை வழங்கினர். இதில் கட்சியின் வந்தவாசி இடைக்குழு செயலாளர் அப்துல் காதர், பெரணமல்லூர் இடைக்குழு உறுப்பினர் இரா.ராஜசேகரன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.