districts

img

வனப்பகுதியில் வேலி அமைக்காத அதிகாரிகள்: விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை,பிப்.13- திருவண்ணாமலை, அடி அண்ணா மலையை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் மான், மயில், காட்டுப்பன்றி போன்ற விலங்கு கள் காட்டை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது.  மேலும் அந்த விலங்குகளை தெரு நாய்கள் கடித்து அவைகள் உயிரிழக்கும் நிகழ்வும் ஏற்படு கிறது.  எனவே விவசாய பயிர்களை பாது காத்திடவும், காட்டு விலங்குகளை பாது காத்திடவும், கசம் குட்டையில் இருந்து கண்ணப்ப நாயனார் கோயில் வரை காட்டைச் சுற்றி வேலி அமைக்க வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை வன அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் அசோகன் தலை மையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவர் டி. கே.வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் எஸ்.பலராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.