districts

img

பழங்குடி மக்களுக்கு மனைப்பட்டா கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை,செப்.23- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் மோட்டூர், அதியங்குப்பம், கீழ்ப்புத்தூர்,கீழ்கொவளை வேடு, ரெட்டிக் குப்பம், தென் சேர்ந்தமங்கலம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்க ளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு காட்டுநாயக்கன் மக்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து தலைமை தாங்கி னார், மாநில பொதுச் செய லாளர் இரா.சரவணன், மாநில பொதுச் செயலாளர் ஏ.அய்யனார், சிபிஎம்.மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ப.செல்வம், என்.சேகரன், விவசாயிகள் சங்க நிர்வாகி டி.கே.வெங்க டேசன், சிபிஎம் வந்தவாசி வட்டாரச் செயலாளர் அப்துல் காதர், கரும்பு விவ சாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் அரிதாசு, விவ சாயிகள் சங்க வட்டாரச் செய லாளர் ஜா.வேசிவராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.