districts

img

குடிநீர் வழங்கக் கோரி அருந்ததிய மக்கள் தர்ணா

திருவண்ணாமலை,மார்ச் 7- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா சனிக்கவாடி கிராமம் இலங்கை அம்மன் கோவில் அருகே வசித்து வரும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் வசிப்பிடத்திற்கு குடிநீர் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு தலித் விடு தலை இயக்கத்தின் மாநில இளை ஞரணி செயலாளர் என்.ஏ.கிச்சா, மாநில மகளிர் அணி தலைவி தலித் நதியா ஆகியோர் தலை மையில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திருமலை பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.