திருவள்ளூர், ஏப். 5- அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய 18-மாத சம்பள பாக்கியை உடனடி யாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி ஓ.எச்.டி ஆபரேட்டர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் எல்லாபுரம் பிடிஒ அலுவலகம் முன்பு செவ்வாயன்று (ஏப். 5) தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திலுள்ள 55 ஊராட்சிமன்றங்களில் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், ஓஎச்டி ஆபரேட்டர்கள் என 400க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்ற னர். இதில் தூய்மை பணியாளர்களுக்கு புதிய ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மை பணி யாளர்களுக்கு 18 மாதம் ஊதிய பாக்கியை வழங்க வேண்டும், பிரதி மாதம் 5ஆம் தேதிக்குள் சம்பளத்தை வழங்க உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநிலத் தலை வர் ஏ.ஜி.சந்தானம், ஒன்றியத் தலைவர் பழனி, செயலாளர் ஸ்டாலின், மாநிலக்குழு உறுப்பினர் குமரவேலு, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சம்பத், கவுன்சிலர் பி.ரவி, மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் ஏ.பத்மா உட்பட பலர் பேசினர். போராட்டத்தின் நிறைவில் சம்பள பாக்கியின் ஒரு பகுதியை உடனடியாக வழங்கப்படும், பூச்சி அத்திப்பேடு போன்ற பெரிய ஊராட்சிகளில் குப்பைகளை தலை யில் சுமக்கும் அவல நிலை போக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.