திருவள்ளூர், அக் 1- திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டையை அடுத்த அஸ்வரேவந்த புரம் ஊராட்சியில் வசிக்கும் இருளர் இன மக்கள் அருகில் உள்ள ஏரியில் குடிசை அமைத்து வசித்து வந்தனர். ஏரிக்குள் குடியிருப்பதால் மழைக்காலத்தில் குடிசைக்குள் தண்ணீர் வரும் போதெல்லாம் மேடான பகுதிகளுக்கு சென்று குடியேறுவதும், தண்ணீர் வற்றிய பிறகு மீண்டும் ஏரியில் வந்து குடியமர்வதுமாக, கடந்த 50 ஆண்டுகளாக இப்படி தான் வாழ்வதாக கூறுகின்றனர். பறவை களை போன்று அங்குமிங்கும் அனாதைகளாக அலைகின்றனர். இப்படி இருளர் இன மக்கள் எந்த வசதிகள் ஏதுமின்றி வாழ்ந்து வருகின்ற னர். இந்த மக்களை அதிகாரத்தில் இருந்த அரசியல் வாதிகளும், அதிகாரி களும் இதுவரை கண்டுகொண்ட தில்லை. இந்தச் சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் அப்பகுதி மக்களை சந்தித்து பேசினர். அப்போது பாதுகாக்கப்பட்ட குடிநீர், சொந்தமாக வீட்டுமனை கூட இல்லாமல், ஏரியில் குடியிருந்து வருவது தெரியவந் துள்ளது. இம்மக்களுக்கு உடனடியாக குடிமனை பட்டா வழங்க வேண்டும் என வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுமீது 6 மாதங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலை யில் திங்களன்று (செப் 26) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பெருமாள் தலைமையில் பாதிக்கப்பட்ட 12 குடும் பங்களையும் அழைத்துக்கொண்டு ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவ லகத்தில் குடும்பத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வட்டாட்சியர் ரமேஷ், அஸ்வரேவந்தபுரம் ஊராட்சியில் 30 சென்டு அரசு நிலத்தை தேர்வு செய்து, அந்த நிலத்தில் இம்மக்களை குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள் ளார். அந்த இடத்திற்கான பட்டாவை உடனடியாக வழங்குமாறும் தொகுப்பு வீடுகளில் மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி தர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரி டம் கேட்டுக் கொண்டுள்ளனர்.