districts

img

ஆவடியில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை  

திருவள்ளூர், அக் 26- ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பருத்திப்பட்டு பஜனை  கோயில் தெரு பகுதியில்  வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நெடுஞ்சாலைத்துறை சார்பாக பருத்திப்பட்டு முதல் வசந்தம் நகர் வரை  இருபுறமும் சுமார் 5200 மீட்டர் அளவிற்கு   ரூ 27.25 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும்  பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை   பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி  ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆணையர் தர்பகராஜ்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.