districts

img

வாழவந்தான் கோட்டையில் தீண்டாமை சுவர் இடிப்பு! மலைவாழ்மக்கள் சங்கத்தின் போராட்டம் வெற்றி

திருவள்ளூர், செப் 15- வாழவந்தான் கோட்டையை சுற்றி எழுப்பப்பட்ட தீண்டாமை சுவரை வியாழனன்று (செப் 15)  அதிகாரிகள் அகற்றிய தால்,  பழங்குடி இன மக்கள் இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஊத்துக்கோட்டை வட்டம், கச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாழவேந்தான் கோட்டையில்  பழங்குடி இன மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக குடும்பத்து டன் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பை ஒட்டி தனிநபர் ஒருவர் நிலத்தை வாங்கி,   வீட்டு  மனைகளை  விற்பதற்காக பிளாட் போடப்பட்டுள்ளார். மனை பிரிவிற்கு அருகில் பழங்குடி இன மக்கள் வசிப்பதால் வீட்டு மனைகள் விலைபோகாது என எண்ணி குடியிருப்பை சுற்றிலும் தனிநபர் தீண்டாமை சுற்று சுவரை எழுப்பியுள்ளனர். இந்த தகவல் அறிந்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் ஊத்துக்கோட்டை வட்டாட்சி யரிடம்  மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரி டம் மனு அளித்தனர்.நட வடிக்கை எடுக்காத பட்சத்தில், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் என தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக வியாழனன்று (செப் 15) ஊத்துக்கோட்டை வட்டாட்சி யர் அருண்குமார் தலை மையில் காவல்துறையின் பாதுகாப்போடு தீண்டாமை சுவரை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். இந்த மகிழ்ச்சியை பழங்குடி இன மக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர். தமிழ்அரசு, ஒன்றிய செய லாளர் கே.முருகன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் த.கன்னியப்பன், மாவட்ட குழு உறுப்பினர் சுதாகர், தமிழ்நாடு  வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டில்லி, சீத்தஞ்சேரி சிபிஎம் கிளைச் செயலாளர் முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.