திருவள்ளூர், அக்.26- கும்மிடிப்பூண்டி வட்டம், பன்பாக்கம், மேல்முதலம்பேடு, நத்தம், அப்பாவரம், ராஜாபாளையம், திருப்பேடு, சிறு புழல்பேட்டை, போரூர் புதுநகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்கள் குடிமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதனால் ஒரு பகுதியினருக்கு மட்டும் பட்டா கிடைத்தது. அதிகாரிகளின் அலட்சியத்தால் பெரும்பாலானவர்களுக்கு பட்டா கொடுக்கவில்லை. இந்த சூழலில் விண்ணப்பித்த அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும், நூறு நாள் வேலையை சுழற்சி முறையில் கொடுக்காமல், தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் புதனன்று (அக் 26) வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வட்டாட்சியர் கொ.கண்ணன் தலைவர்களி டம் நடத்திய பேச்சு நடத்தினார். அடுத்த ஒரு மாதத்தில் தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என எழுத்து பூர்வ மாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.