districts

img

குடிநீர் வழங்கக்கோரி ஆரணி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர், அக்15- ஆரணி வள்ளுவர்மேடு பகுதிக்கு குடிநீர் வழங்க கோரி, பேரூராட்சி அலுவல கத்தை பொதுமக்கள் சனிக்கிழமையன்று (அக்.15) முற்றுகை போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம்,  பொன்னேரி அடுத்த  ஆரணி பேரூராட்சி நூற்றாண்டை கண்ட பேரூராட்சியாக இம்மாவட்டத்தில் உள்ளது.இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது.பேரூராட்சிமன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ராஜேஸ்வரியும், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுகுமாரும் பதவி வகித்து வருகின்றனர். பேரூராட்சி செயல் அலுவலராக கலாதரன் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில், ஆரணி பேரூராட்சியில் உள்ள வள்ளுவர்மேடு பகுதியில் சீரான முறையில் குடிநீர் வழங்கவில்லை, இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கின்ற னர். உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும், தமிழ் காலனியில் குடிநீர் ஆழ்துளை கிணறு  அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில்  அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்,  பணிக்கான ஒர்க் ஆர்டர் பொது மக்க ளுக்கும்,  இப்பகுதியைச் சேர்ந்த கவுன் சிலருக்கும்  காண்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவுன்சிலர் பொன்னரசி நிலவழகன் தலைமையில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை அறிந்த பேரூராட்சி அதிகாரிகள் நேரடியாக  பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.மேலும், வள்ளுவர்மேடு பகுதிக்கு  பத்து நாட்களுக்குள் சீரான முறையில் குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில்  அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.