நூல் விலை கிலோவுக்கு மேலும் 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நூலின் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் ஆடை தயாரிப்பாளர்கள். ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
அதனைதொடர்ந்து பஞ்சு இறக்குமதிக்கு விதித்துள்ள 11 சதவீத வரியை நீக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நாடாளுமன்றத்தில் நேற்று (பிப்.1) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், இதுதொடர்பான எந்த அறிவிப்பும் ஒன்றிய அரசு அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த மாதம்(பிப்ரவரி) புதிய நூல் விலை வெளியாகி உள்ளது. இதில் அனைத்து ரக நூல்களும் மேலும் 10 ரூபாய் உயர்த்தப்பட்டு, கிலோ ரூ.340 முதல் ரூ.390 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பின்னலாடை வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் நூல் விலை உயர்வால் ஆர்டர்கள் இழக்க நேரிடும் என ஏற்றுமதியாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.