திருப்பூர், ஜன.1- மார்க்சிஸ்ட் கட்சியினர் அறி வித்த போராட்ட எதிரொலியாக, வீட்டுமனை பட்டா வழங்குவதாக ஊத்துக்குளி வட்டாட்சியர் வாக்கு றுதியளித்தார். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டத்தில் குடியிருக்க நிலமற்ற மக்க ளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி வியாழனன்று ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊத்துக்குளி வட்டக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து புதன்கிழமை மாலை ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவல கத்தில், வட்டாட்சியர் கலாவதி தலை மையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், வட்டக்குழு செயலாளர் கே.ஏ.சிவ சாமி, வட்டக்குழு உறுப்பினர் எஸ்.கே. கொளந்தைசாமி மற்றும் ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூர் நிலவருவாய் ஆய் வாளர்கள், காவல் துறையினர் கலந்து கொண்டனர். இதில், கடந்த 2019 நவம்பர் மாதத்தில் வீட்டுமனை பட்டா கோரி அளிக்கப்பட்ட 1044 மனுக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து வலியுறுத்தி பேசப்பட்டது. இது குறித்து ஒருமாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதி தெரி வித்தார். இதை ஏற்று காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.