districts

img

சிபிஎம் திருப்பூர் மாவட்டச் செயலாளராக செ. முத்துக்கண்ணன் தேர்வு

அவிநாசி, டிச.2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளராக செ.முத்துக்கண்ணன் தேர்வு செய்யப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 24 ஆவது மாநாடு அவிநாசியில் டிசம்பர் 1, 2 தேதிகளில் நடைபெற்றது.  

இம்மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் பேசினார். முதல்நாள் மாபெரும் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் தீக்கதிர் சந்தாக்கள் வழங்கப்பட்டன. இரண்டாவது நாளான திங்களன்று பிரதிநிதிகள் விவாதத்தைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் தொகுப்பு ரை ஆற்றினார்.

புதிய மாவட்டக்குழு தேர்வு

மாநாட்டில் 41 பேர்  கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக செ.முத்துக்கண்ணன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் களாக கே. காமராஜ், சி.மூர்த்தி, எஸ்.ஆர்.  மதுசூதனன், எஸ். சுப்பிர மணியம், கே. ரங்கராஜ், ஆர்.  குமார், டி. ஜெயபால், ச. நந்த கோபால், ஆர். காளி யப்பன், சி. மணிகண்டன், தெள.சம்சீர் அகமது, எஸ். பவித்ரா தேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கட்சியின் மாநில மாநாட்டு பிரதிநிதிகளாக பெண்கள் மூவர் உள்பட  13 பேர் தேர்வு செய்யப் பட்டனர்.   மாநாட்டை நிறைவு செய்து மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாரன் உரையாற்றினார். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.