திருப்பூர், ஜன. 13 - மத்திய அரசு கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்குச் சாதகமாக திருத்தியுள்ள தொழிலாளர் நலச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் குடிய ரசு தினத்தன்று இருசக்கர வாகனப் பேரணி நடத்த முடிவு செய்துள்ள னர். திருப்பூர் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டம் புதன்கிழமை மதியம் 12 மணிக்கு பி.என்.ரோடு ஏ.ஐ.டி.யூ.சி. சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்னண் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஏஐடியுசி மாவட்ட பொது செயலாளர் என்.சேகர், சிஐடியு பனியன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், எல்பிஎப் மாவட்ட துணை தலைவர் ரங்க சாமி, எல்பிஎப் பனியன் சங்க பொரு ளாளர் பூபதி, ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் சிவசாமி, எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் முத்துசாமி, எம்எல்எப் மாவட்ட செயலாளர் சம்பத், எம்எல்எப் பனியன் சங்க செயலாளர் மனோகர் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் முடிவுகள் வருமாறு: மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வேளாண் சட்டம் மூன்றையும், தொழிவாளர் நல சட்ட திருத்தங்களையும் உடனே திரும்ப பெற வலியுறுத்தி ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தில் தேசிய கொடி பிடித்து வாகன பேரணி துவங்கி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் முடித்து, உறுதிமொழி ஏற்பது என்று முடிவு செய்யப் பட்டது. மேலும், இதுதொடர்பாக விவசாய சங்கங்கள் உடன் கலந்து பேசி ஒருங்கிணைந்த ஊர்வலத்தை. நடத்திட வரும் 20ல் மீண்டும் கலந்து பேசுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.