districts

img

சொத்து வரி, மின் கட்டண உயர்வு, வாடகைக்கு ஜிஎஸ்டியா? திருப்பூரில் டிச.18-ல் கடையடைப்பு

திருப்பூர், டிச.7- திருப்பூர் மாநகராட்சியில் சொத்து  வரி உயர்வு, மாநில அரசின் மின் கட்  டண உயர்வு மற்றும் வணிகப் பயன் பாட்டுக் கட்டடங்களுக்கு ஒன்றிய அரசு  விதித்துள்ள 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி  விதிப்பு ஆகியவற்றைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்துக்  கடைகளிலும் கறுப்புக் கொடி ஏற்று வது என்றும், டிசம்பர் 18-ஆம் தேதி  கடையடைப்புப் போராட்டம் நடத்துவ தாகவும் திருப்பூர் அனைத்து வியா பாரிகள் சங்கப் பேரவை அறிவித்துள்ளது.

திருப்பூரில் சனிக்கிழமையன்று அனைத்து வியாபாரிகள் சங்கப் பேரவை மற்றும் தொழில் அமைப்பு களின் நிர்வாகிகள் கூட்டம் தலைவர் கே.சி.எம். துரைசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடி வில் அனைத்து வியாபாரிகள் சங்கப்  பேரவையின் தலைவர் கே.சி.எம். துரை  சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

அதிகாரிகளின்  தன்னிச்சைப் போக்கு

திருப்பூர் மாநகராட்சியில் சொத்து  வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள் ளது. ஏற்கெனவே 2023ஆம் ஆண்டு  உயர்த்தப்பட்ட சொத்து வரியே அதிக மாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வரியை உயர்த்தவில்லை எனச் சொல்லி தற்போது வரியை உயர்த்து வதாகக் கூறுகின்றனர். ஆனால் இந்த  வரி உயர்வை எப்படிச் செய்ய வேண்  டும் என ஆலோசித்து முடிவு செய்யா மல் அதிகாரிகளின் தன்னிச்சைப் போக்  கில் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்தாண்டு வரி உயர்வே அதிக மாக இருக்கிறதென்று 5000 பேர் ரேசன்  கார்டுகளை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் ஒப்படைத்தனர். அவ்வாறி ருக்க, தற்போது மீண்டும் உயர்த்தப் பட்ட வரியால் கடைகள், வணிக நிறு வனங்கள், பொதுமக்கள் என அனைத்  துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்  கப்படுவர். கடைகளை நடத்த முடியாத  நிலை ஏற்படும்.

மின் கட்டண உயர்வால் பாதிப்பு

அதேபோல் தமிழ்நாட்டில் மின்சா ரக் கட்டண உயர்வும் கடும் பாதிப்பை  ஏற்படுத்தும். தொழில், வணிக நிறுவ னங்கள் செயல்பட முடியாமல் முடங்  கக்கூடிய நிலை ஏற்படும். எனவே மின்  சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மாநில அரசு பேசி மின் கட்டண உயர்  வையும் குறைக்க வேண்டும்.

குறிப்பாக திருப்பூரில் தொழில் நிலைமை சரியாக இல்லை. இந்தச் சூழ்நிலையில் சொத்து வரி உயர்வும்,  மின் கட்டண உயர்வும் பெரும் பாதி ப்பை ஏற்படுத்தும் என்பதால் இதைக் கைவிட வேண்டும். முந்தைய சொத்து  வரி உயர்வே அதிகம் என்பதால் தற்  போது உயர்வைக் கைவிட வேண்டும்.  பழைய வரியையே தொடர வேண்டும்.

ஜிஎஸ்டியால் கடையை  மூடும் நிலை

அதேபோல் ஒன்றிய அரசானது வணிகக் கட்டடங்களுக்கு 18 சதவிகி தம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இத னால் கட்டட உரிமையாளர்கள் வாட கையை உயர்த்துவார்கள். வாடகை யுடன் வரியையும் சேர்த்து உயர்த்தும்  போது வாடகைக்கு இருக்கும் வணி கர்கள், தொழில் துறையினர் என்ன  செய்ய முடியும்? கடையை மூடிவிட்டுச்  செல்லும் நிலைதான் ஏற்படும்.

எனவே, சொத்து வரி உயர்வு, மின்  கட்டண உயர்வைக் கைவிட வேண் டும். வணிக அடிப்படையிலான வாட கைக் கட்டடங்களுக்கு விதிக்கப்பட் டுள்ள 18 சதவிகித ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை (டிச.8) முதல் அனைத்து வணிகக் கடைகள், வியா பார நிறுவனங்களிலும் கறுப்புக் கொடி  ஏற்றப்படும். 

இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 18-ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை  6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து வியாபார நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்களும் மூடப்படும். மற்ற தொழில் அமைப்பு களும் இந்த வரி உயர்வுக்கு எதிர்ப்புத்  தெரிவித்துள்ளனர். திருப்பூர் மட்டுமல்  லாது இந்த மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம் உள்பட அனைத்துப் பகுதி களிலும் இந்த கடையடைப்பு போராட்  டம் நடத்தப்படும். 

இவ்வாறு கே.சி.எம். துரைசாமி தெரிவித்தார்.

நாளை அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  சொத்து வரி உயர்வை எதிர்த்து போரா ட்டங்கள் நடத்தியுள்ள நிலையில் டிசம்பர் 9-ஆம் தேதி திங்களன்று இந்த  இரு இடதுசாரி கட்சிகளுடன் காங்கி ரஸ், விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து அனைத்துக் கட்சி கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவும்  முடிவு செய்துள்ளன. அதிமுக சார்  பில் கடந்த வாரம் உண்ணாவிரதம் நடைபெற்றது. தற்போது அனைத்து வியாபாரிகள் சங்கங்களும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 

ஏற்கெனவே தொழில் அமைப்பு களும் சொத்து வரி, மின் கட்டண உயர்வுக்கும், வணிகக் கட்டடங்களின் வாடகைக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதித்திருப்பதற்கும் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.