திருப்பத்தூர், பிப். 9- ஆலங்காயம்-காவலூர் சாலையை விரிவாக்கம் செய்யக் கோரி மலைப் பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் - காவலூர் இடையில் ஆர்எம்எஸ் புதூர் பகுதியிலிருந்து காவலூர் வரை சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு மலைப் பகுதியில் குறுகிய சாலை அமைக்கப்பட்டது. நாளடைவில் போக்குவரத்து அதிகரித்ததால், குறுகிய சாலையை விரிவாக்கம் செய்யக்கோரி, அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பல ஆண்டுகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் ஏற்கனவே இருந்த குறுகிய சாலை யின் மேலே புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இதையறிந்த மலைவாழ் மக்கள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் சென்று சாலையின் இருபுறம் பள்ளங்கள் இருப்பதால் இருசக்கர வாகனங்க ளில் வருவோர் எதிர்திசையில் பேருந்து, லாரி, கார் போன்ற வாக னங்கள் வரும் போது, சாலையின் இருபுறம் உள்ள 2 அடி பள்ளத்தில் விழுந்து அடிபட்டுச் செல்வதாகவும், சாலை விரிவாக்கம் செய்து, சீரமைத்துத் தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் சாலையின் இருபுறம் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் 2 அடி அளவுக்கு, சிமெண்ட் சாலை போடுவதற்கான பணிகள் நடை பெற்றன. இதையறிந்த ஆலங்காயம் வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, அனு மதியுமின்றி வனப்பகுதியில் விரி வாக்கம் செய்யக்கூடாது என தடுத்ததாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மலைவாழ் மக்கள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்எம்எஸ் புதூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி, வட்டாட்சியர் சம்பத், ஏடிஎஸ்பி சுப்பாராஜி, டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன், மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா ஆகியோர் மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது பல ஆண்டுகாலமாக சாலை விரிவாக்கம் செய்து தரக்கோரி பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக சாலை விரிவாக்கம் செய்ய பணிகளை தொடங்கினால்தான் கலைந்து செல்வோம் எனக் கூறினர். இதை யடுத்து, கோட்டாட்சியர் காயத்ரி, நெடுஞ்சாலைத் துறை அதி காரிகளை வரவழைத்து, உடனடி யாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். பின்னர், முறையாக மனு அளித்து அனுமதி பெறப்பட்டு, விரைவில் சாலை விரிவாக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.