தூத்துக்குடி, பிப்.3- தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு விதிமுறை மீறி செயல்பட்டதாக 203 பேருக்கு மொத்தம் ரூ.40,900 அப ராதம் விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 46 பேர் மீதும், ஊரக உட்கோட்டத்தில் 26 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 24 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட் டத்தில் 19 பேர் மீதும், மணியாச்சி உட் கோட்டத்தில் 27 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 42 பேர் மீதும், விளாத்தி குளம் உட்கோட்டத்தில் 7 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 11 பேர் மீதும் என மொத்தம் 202 பேர் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டு ரூ.40,400 அபராதம்விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்செந்தூர் உட்கோட்டத்தில் சமூக இடை வெளியை கடைப்பிடிக்காத ஒரு வர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முக கவ சம் அணியாதவர்கள்மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்ககாத வர்களுக்கு மொத்தம் ரூ.40,900 அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. “பொதுமக்கள் அனை வரும் கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு அரசு அறி வித்துள்ள நெறி முறைகளை கடை பிடித்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி நம்மையும் காப்பாற்றி, நம்மால் பிறருக்கு தொற்று பர வாமல் பிறரையும் காப்பாற்ற வேண்டும்” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.