தேனி, ஜூன் 23- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின கடைக்கோடித் தமிழரின் கனவுகளை தாங்கி – அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற இலட்சியத்திற்கிணங்க, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் தொடங்கிட வைத்து, தொழில் முனைவோர்களாக உருவாக்கி டும் பொருட்டு எண்ணற்ற திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் , தேனி மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 07.05.2021 முதல் தற்போது வரை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் 4 இளைஞர்களுக்கு ரூ.283.31 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.26.15 இலட்சம் மானியத்தொகை யும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் 12 இளைஞர்களுக்கு ரூ.556.98 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.87.49 இலட்சம் மானியத்தொகை யும், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் 5 இளைஞர்களுக்கு ரூ.113.27 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.17.38 இலட்சம் மானி யத்தொகையும், கம்பம் சட்டமன்ற தொகுதியில் 10 இளைஞர்களுக்கு ரூ.259.89 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.28.40 இலட்சம் மானியத்தொகையும் என மொத்தம் 31 இளைஞர்களுக்கு ரூ.1213.45 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.159.42 இலட்சம் மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் 19 இளைஞர்களுக்கு ரூ.66.72 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.16.68 இலட்சம் மானியத்தொகையும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி யில் 44 இளைஞர்களுக்கு ரூ.141.16 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்ட தில் ரூ.35.29 இலட்சம் மானியத்தொகையும, போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் 38 இளைஞர்களுக்கு ரூ.134.36 இலட்சம் கடனு தவி வழங்கப்பட்டதில் ரூ.33.59 இலட்சம் மானியத்தொகையும், கம்பம் சட்டமன்ற தொகுதியில் 58 இளைஞர்களுக்கு ரூ.226.82 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.54.12 இலட்சம் மானியத்தொகையும் என மொத்தம் 159 இளைஞர்களுக்கு ரூ.569.06 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.139.68 இலட்சம் மானியத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம் 190 இளைஞர்களுக்கு ரூ.1782.51 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.299.10 இலட்சம் மானியத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம் மற்றும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டங்களின் கீழ் பயனடைந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர். இத்தகவலை தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (மு.கூ.பொ),நா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்தித்தொகுப்பில் கூறியுள்ளார்.