districts

img

டிஆர்இயூ கொடிக்கம்பம் சேதம் குற்றவாளிகளை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஆக.10-  தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தெட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (டிஆர்இயூ) கொடிக்கம்பத்தை உடைத்து சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டிஆர்இயூ - சிஐடியு சார்பில் தஞ்சை ரயிலடியில் செவ்வாய்க்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ் கண்டன உரையாற்றினார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், அரசுப் போக்குவரத்து சங்க தலைவர் காரல் மார்க்ஸ், அரசு விரைவுப் போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் வெங்கடேசன், மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் அரவிந்தசாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த டிஆர்இயூ கொடிக் கம்பத்தை நான்கு துண்டுகளாக உடைத்து, கொடியை கிழித்தெறிந்து அராஜகத்தில் ஈடுபட்ட வேலு, கார்த்திக், வினோத் ஆகிய நபர்கள் மீது தஞ்சை மேற்கு காவல் நிலையத்திலும், ரயில்வே நிர்வாகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.