தஞ்சாவூர், செப்.29- தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் வளர் மையத்தின் சார்பில் நடைபெற்ற முத்தமிழ ரங்கம் நிகழ்ச்சியில், “முத்தமிழ்க் கலைகளில் மூத்த கலை - வில்லுப் பாட்டு” என்னும் தலைப்பில் உரை யரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில், சென்னை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வரும், பிரபல வில்லிசைக் கலைஞருமான முனைவர் சீ.திருமகன் வில்லுப் பாட்டு கலை குறித்து பேசினார். இந்நிகழ்வில் பேசிய துணை வேந்தர் முனைவர் வி.திருவள்ளு வன், “மக்களிடையே எளிதில் சென்றடைய கூடிய கலைகளில் தலைமை இடத்தில் வில்லுப்பாட்டு இருக்கின்றது. விரைவில் பிரபல வில்லுப்பாட்டு இசைக்கலைஞர் முனைவர் சீ.திருமகன் மூலம் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர் களுக்கு பயிற்சி அளிக்கப்பட வுள்ளது. வில்லுப்பாட்டுக்கு உரித்தான கருவிகளையும், தமிழ்ப் பல்கலைக்கழகம் மாண வர்களுக்கு, ஏற்பாடு செய்து அளிக் கப்படும்” என்றார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழ கப் பதிவாளர்(பொ) முனைவர் சி. தியாகராஜன் வரவேற்றார். தமிழ் வளர் மையத்தின் இயக்குநர் (பொ) முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன், கலைப்புல முதன்மையர் முனை வர் பெ.இளையாப்பிள்ளை ஆகி யோர் பேசினர். முனைவர் மா. ரமேஷ்குமார் நன்றி கூறினார்.