தஞ்சாவூர், டிச.23- நெல் விற்பனையில் வெளியூர் வியா பாரிகளுக்கு துணை போகும் கொள் முதல் பணியாளர்கள், சுமைப்பணித் தொழிலாளர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவல கத்தில், கோட்ட அளவிலான விவசாயி கள் குறைதீர் கூட்டம் வெள்ளியன்று கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது. இதில், ஒரத்தநாடு, தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான விவ சாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறுகை யில், ‘‘அனைத்து கொள்முதல் நிலையங் களிலும் சி.சி.டி.வி.,கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். காவல் துறை, உள்ளாட்சி துறையும் இணைந்து கொள்முதலில் நடக்கும் முறை கேட்டை கண்காணிக்க வேண்டும். கடந்த ஆண்டு சம்பா, தாளடி நெற்பயிர் களுக்கு பயிர் காப்பீட்டு தொகையாக திருவாரூர் மாவட்டத்துக்கு 94.56 கோடி, புதுக்கோட்டைக்கு 23.01 கோடி, பெரம்பலூருக்கு 20.29 கோடி, அரிய லூருக்கு 17.97 கோடி, நாகைக்கு 13.52 கோடி என வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வெறும், ரூ.36 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. மேலும், விவசாயிகளை தேர்வு செய்வ தில் முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே, காப்பீடு நிறுவனம் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். வருங்கா லத்தில் சோதனை அறுவடையின் போது விவசாயிகளை அழைத்து வேளாண், காப்பீடு நிறுவனம் இணைந்து அந்த பணிகளை செய்ய வேண்டும். திருவையாறு வட்டம் மேலப்புன வாசல், வைத்தியநாதன்பேட்டை, ஆற்காடு ஆகிய கிராமங்களில் அனு மதியின்றி செங்கல்சூளை அமைக்கப் பட்டுள்ள நிலையில், பாசன வாய்க்கால் கள், அதன் கரைகளில் 30 அடி ஆழத் திற்கு மண் எடுப்பதால் வாய்க்கால்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், பாச னத்திற்கு முறையாக தண்ணீர் கிடைக் காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள னர். இதற்கு அரசு தீர்வு காண வேண்டும். அணைக்குடி முதல் விளங்குளம் வரை கொள்ளிடம் கரை சாலை மிகவும் மோசமாக உள்ளதால், குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றி செல்வதில் மிகவும் சிரமமாக உள்ளது, மேலும், அப்பகுதியில் 4 கி.மீ., தூரத் திற்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை மேம்படுத்த வேண்டும். ஒரத்தநாடு சுற்றுவட்டாரப் பகுதி யில், சம்பா அறுவடை பணிகள் ஒரு சில இடங்களில் துவங்கப்பட்டு விட்டன. எனவே, தேவைக்கு ஏற்ப நெல் கொள் முதல் நிலையங்களை திறக்க வேண் டும். அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், வெளியூர் நெல் வியா பாரிகளின் நெல் விற்பனையை தடுக்க புதிதாக திருச்சி மண்டலத்தில் எஸ்.பி., நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணி களில் காவல்துறையினர் ஈடுபட்டு வரு கின்றனர். அமைச்சரும் இதை அவ்வப் போது கூறி வருகிறார். ஆனால், வெளி யூர் நெல் வியாபாரிகள், நெல்லை டெல்டா மாவட்டங்களில் விற்பனை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கு கொள்முதல் பணியாளர்கள், சுமைப்பணித் தொழிலாளர்கள் முழு மையாக ஆதரவு தருகிறார்கள். எனவே, இதை தடுக்க அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தினர்.