தஞ்சாவூர், செப்.6 - தஞ்சாவூர் மாவட்டம் திருவேதிக் குடி கண்டியூரில் பிரசித்தி பெற்ற வேத புரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவி லுக்குள் கடந்த 62 ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்கள் புகுந்து பழங்கால நடராஜர் சிலையை திருடிச் சென்ற னர். இதுகுறித்து முதலில் நடுக்கா வேரி காவல் நிலையத்தில் புகார் செய் யப்பட்டது. ஆனால் வழக்கில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து திருவேதிக்குடி கிரா மத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்ப வர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையிடம் புகார் செய்தார். அதன் பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் இந்திரா தலைமையில் உதவி ஆய்வாளர் சின்னத்துரை, காவ லர் ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய குழுவினர், கூடுதல் காவல் கண்காணிப் பாளர் பாலமுருகனின் நேரடி மேற்பார் வையில் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், தற்போது கோவி லில் பக்தர்கள் வழிபட்டு வரும் நடரா ஜர் சிலை போலியானது என்பதும், 62 ஆண்டுகளுக்கு முன்பு உண்மையான நடராஜர் சிலை திருடப்பட்டு வெளி நாட்டுக்கு கடத்தப்பட்டதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி யின் இந்தோ - பிரெஞ்சு நிறுவனத்திடம் இருந்து நடராஜர் சிலையின் அசல் புகைப்படங்களை விசாரணைக் குழு வினர் கேட்டனர். பின்னர், அசல் சிலை யின் படத்தை பெற்றுக்கொண்டு பல்வேறு அருங்காட்சியகங்கள், கலைப் பொருள் சேகரிப்பாளர்களின் சிற்றேடு கள், ஏல மையங்களின் வலைதளங் களில் உலகளாவிய தேடலை தொடங் கினர். விரிவான தேடலுக்கு பிறகு, அமெரிக் காவின் நியூயார்க்கில் உள்ள அருங் காட்சியகம் ஒன்றில், திருடப்பட்ட உண்மையான நடராஜர் சிலை இருப் பதை விசாரணைக் குழுவினர் கண்டு பிடித்தனர்.
மேலும் அருங்காட்சியக இணையதளத்தில் இருந்து பதிவி றக்கம் செய்யப்பட்ட சிலையின் படத்தை புதுச்சேரியில் உள்ள இந்தோ-பிரெஞ்சு நிறுவனத்தில் இருந்து பெறப் பட்ட படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்த போது, நியூயார்க்கில் உள்ளது நடரா ஜர் சிலைதான் என்பது நிரூபணம் ஆனது. இதனை தொடர்ந்து, அமெரிக்கா வின் நியூயார்க்கில் இருந்து நடராஜர் சிலையை மீட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோவிலில் வேறு ஏதேனும் சிலைகள் திருடப்பட்டதா என்பது குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர். உண்மையான சிலையை கண்டு பிடித்த கூடுதல் காவல் கண்காணிப்பா ளர் பாலமுருகன், நேரடி மேற்பார்வை யில் இயங்கும் ஆய்வாளர் இந்திரா தலைமையிலான குழுவினரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இயக்குநர் ஜெயந்த் முரளி, காவல் கண்காணிப் பாளர்கள் டாக்டர் தினகரன், டாக்டர் ரவி ஆகியோர் பாராட்டி வெகுமதி வழங் கினர்.