தஞ்சாவூர், ஜன.7- ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை நடத்தா மல் காலம் தாழ்த்துவதை கண்டித்து தஞ்சாவூர் மேற் பார்வை பொறியாளர் அலு வலக வாயிலில், மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மத்திய அமைப்பு மாநிலச் செயலாளர் எஸ்.ராஜாராமன் தலைமை வகித் தார். சம்மேளனம் பொன்.தங்கவேலு, மத்திய அமைப்பு காணிக்கைராஜ், சங்கர், ஐக்கிய சங்கம் பார வேல், எம்ப்ளாயீஸ் பெட ரேஷன் ராஜா, அண்ணா தொழிற்சங்கம் குணசேக ரன், பொறியாளர் அமைப்பு வேல்முருகன் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.