districts

img

உயர்த்தப்பட்ட வாடகையை திரும்பப் பெறுக! கோயில் இடத்தில் குடியிருப்போர் கோரிக்கை

கும்பகோணம், மே 12- கும்பகோணம் மாநகராட் சிக்குட்பட்ட தாராசுரத்தில் காமாட்சியம்மன் கோவில் இடங்க ளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சாதாரண கூலித் தொழிலாளர்கள்.  இந்நிலையில் கோயில் நிர் வாகம் சார்பில் உயர்த்தப்பட்ட வாடகையை உடனே செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப் பப்பட்டது. இதனால், காமாட்சி யம்மன் கோயில் இடங்களில் குடியிருப்போர் பாதுகாப்பு சங்கம் துவக்கப்பட்டது துவக்க நிகழ்ச்சிக்கு சங்க அமைப்பாளர் எஸ்.வி.மணி தலைமை வகித்தார். கூட்டத்தில் அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க தஞ்சை மாவட்ட அமைப் பாளர் சா.ஜீவபாரதி, கும்பகோ ணம் மாநகராட்சி மாமன்ற உறுப் பினர் செல்வம், சிபிஎம் மாநகர செயலாளர் செந்தில்குமார், தாரா சுரம் காமாட்சியம்மன் கோயில் நிலங்களில் குடியிருப்போர் ஏராள மானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தாராசுரம் காமாட்சி அம்மன் கோயில் இடங்க ளில் குடியிருப்போர் சங்கத்தை அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்துடன் இணைத்து செயல் படுவது எனவும், கால காலமாக தாராசுரம் காமாட்சியம்மன் கோ யில் இடங்களில் குடியிருப்பவர்க ளுக்கு உயர்த்தப்பட்ட வாடகை யை நிறுத்திக்கொண்டு பழைய வாடகைகளை தொடர்ந்து வசூல் செய்ய வேண்டும். இது சம்பந்தமாக திங்களன்று இந்து சமய அறநிலைய துறை அதிகாரியை பட்டீஸ்வரத்தில் சந்தித்து பேசுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.