தஞ்சாவூர், மே 17 - தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன்கள் களவு மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2021 மற்றும் 2022 ஆம் வருடத்தில், காவல் நிலையங்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக, மத்திய மண்டல காவல்துறை தலைவர், தஞ்சை சரகக் காவல்துறை துணைத்தலைவர் வழி காட்டுதலின்படி, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, களவாடப்பட்ட மற்றும் காணாமல் போன செல்போன்களை விரை வாக கண்டுபிடிக்க, தனிக்கவனம் செலுத்திய காவல் துறையினர் மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு சுமார் ரூ.15 லட்சம் மதிப்புடைய 110 ஸ்மார்ட் செல்போன்களை மீட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மீட்கப்பட்ட செல்போன் களை ஒப்படைக்கும் நிகழ்வில், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பா ளர் டி.சுவாமிநாதன், உரிய புகார் மனுதா ரர்களிடம் செல்போனை வழங்கினார். மேலும், சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்க லாம் என தெரிவிக்கப்பட்டது.